தமிழகத்திற்கு 10 கோடி தடுப்பூசிகளை வழங்கிட வலியுறுத்தி திருச்சியில் DYFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்திற்கு 10 கோடி தடுப்பூசிகளை வழங்கிட வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய மற்றும் மாநில அரசை கண்டித்தும் தமிழகத்தில் (செங்கல்பட்டு HCL, கிண்டி, ஊட்டி) உள்ளிட்ட இந்தியாவிலுள்ள 11 தடுப்பூசி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு 10 கோடி தடுப்பூசியை வழங்கிட வலியுறுத்தியும், இரயில்வே துறையில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கிட வலியுறுத்தியும், மாற்றுதிறனாளிகள், பெண்களுக்கான முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை உடனடியாக இணைத்திட வலியுறுத்தியும்,
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவி தொகையை தொடர்ந்து வழங்கிட வலியுறுத்தியும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் S.சுரேஷ், மாவட்ட செயலாளர் பா.லெனின் மற்றும் 70 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo