“மாணவர்களுக்கான புத்தக திறனாய்வு போட்டி” 23ம் தேதி நடக்கிறது!

0 350
Stalin trichy visit

திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பாக உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு புத்தக திறனாய்வு போட்டிகள் நடைபெறவுள்ளது. புத்தக

திறனாய்வு போட்டி 6 முதல் 9 முடிய வகுப்புகளுக்கு வரை ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு ஒரு பிரிவாகவும், பொது வாசகர்களுக்கு ஒரு பிரிவாகவும் 3 பிரிவுகள் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 23ம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட மைய நூலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும். போட்டியில் கலந்து கொள்பவர்கள்

வருகிற 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 0431-2702242 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணக்கர்கள் அவர்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒரு புத்தகத்தை திறனாய்வு செய்ய வேண்டும். ஒரு போட்டியாளருக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். முதல் சுற்றில்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடத்தை பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2வது சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் புத்தகப்பிரியர் என்ற விருதும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.