சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்; கழிவறையில் குழந்தை பிறந்தது
திருச்சி பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அரீஷ் என்ற சூரியபிரகாஷ் (வயது 23). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். 6 மாத காலம், அச்சிறுமியுடம் பழகிய தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கழட்டிவிட முயன்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் வயிற்றில் மாற்றம் தெரியவே அவரது பெற்றோர்கள் இதுகுறித்து கேட்டுள்ளனர் அவ்வப்போது அந்த சிறுமி ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்து வந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பமாகியும் அதை வெளியே தெரியாமல் மறைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி அச்சிறுமி தனது வீட்டில் உள்ள கழிவறையில் ஆண் குழந்தை பெற்றெடுத்து அங்கே ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். கழிவறை சென்ற தனது மகளை நீண்ட நேரமாக காணவில்லை என பதறிப்போன பெற்றோர் கழிவறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது ஆண் குழந்தை பிறந்த நிலையில் தனது மகள் மயங்கி கிடப்பதைை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பதறி போன பெற்றோர் மகள் மற்றும் குழந்தையை மீட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் விசாரித்தபோது, சிறுமிக்கு தற்போது 17 வயது ஆனதும், திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்ததும் தெரியவந்தது. இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அதீம், வாலிபர் சூரியபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சூரிய பிரகாசை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.