கோட்டூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முசிறி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் கம்ப பெருமாள் கோயில் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஈவூர் கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி வாத்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்ற வாத்தலை போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தியது என விசாரணை செய்து வருகின்றனர்.