திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் அடுத்த குமாரக்குடியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.இவருடைய மகன் 32 வயதான ரங்கநாதன். இவர் தனது பைக்கை கடந்த 2 ந்தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் பைக்கை திருடிச் சென்றனர். இதுகுறித்து ரங்கநாதன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.