ரூ.35,400 சம்பளத்தில் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் வேலைவாய்ப்பு!

0 727
Stalin trichy visit

மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விவரம் குறித்து பின்வருவனவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளவும்….
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Junior Engineer(Civil) – 02
சம்பளம்: ரூ.35,400- 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
பணி: Junior Accountant – 01
சம்பளம்: ரூ.29,200-92,300
தகுதி: காமர்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Upper Division Clerk – 01

 

சம்பளம்: ரூ.25,500 – 81,100
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்எஸ் வோர்ட், ஆபிஸ், எக்ஸல், பவர் பாயிண்ட் மற்றும் இண்டர்நெட் பிரிவில் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்
பணி: Stenographer Grade-III- 03
சம்பளம்:ரூ.25,500-81,100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.840. எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்
விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2022
மேலும் விவரங்கள் அறிய www.nwda.gov.in என்ற இணையதள பக்கத்தை க்ளிக் செய்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.