“திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேர்த் திருவிழா” 13ந் தேதி நடக்கிறது!

0 492
Stalin trichy visit

கலைகளுக்கு பிறப்பிடமாகவும் ஆன்மீகத்தின் உறைவுடமாகவும் விளங்குகின்ற திருநகரம் திருச்சி, இத்திருச்சியின் இதயமாகவும் 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்றதாகவும், தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்பினையும், தட்சிணா கயிலாயம் என்று அழைக்கப்படும் திருப்பெயரையும் கொண்ட கலைக் கருவூலமாக திகழ்வது மலைக்கோட்டை திருக்கோயில், திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்ற திருத்தலமாகும். எட்டு தொகை நூல்களில் ஒன்றாகிய அகநானூற்றில் குறுங்குடி மருதனார் என்னும் சங்கப்புலவர் அம்மலைக்காட்சியை கரங்கிசை விழாவின் உறைந்தை குணாது நெடும் பெருங்குன்றம் எனப் பாடியுள்ளார். அதாவது வேறு இசைக்கருவிகள் ஒலிக்க பல விழாக்கள் நடைபெறும் உறையூரின் கிழக்கு திசையில் செம்மாந்து நிற்கும் நீண்டப் பெரிய குன்று என்று இத்தலம் சங்க இலக்கியத்தில் புகழ் பெற்று உள்ளது. இத்திரிசிராமலை 3500 பில்லியன்

ஆண்டுகள் இனிமையானது என புவியியலார் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். தொன்மைவாய்ந்த தலமாக மூன்று சிகரங்களை உடைய இம்மலையில் சுயம்பு மூர்த்தியாக தாயும் ஆன தயாபர மூர்த்தியாக பால் நினைந்தூட்டும் தாயின் மேலான பரிவுடன் வேண்டுவோர்க்கு வேண்டுமென எல்லாம் அருள் செய்யும் எல்லாம் வல்ல மட்டுவார் குழலம்மைஉடனுறை தாயுமான திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு நடைபெறும். அதன்படி தேர்த் திருவிழா முக்கிய நாட்கள் பற்றி விபரத்தை பின்வருவனவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளவும்….

தேர்திருவிழா அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி 04.05.2022 புதன் விக்னேஸ்வர பூஜையுடன் திருவிழா ஆரம்பமாகிறது. 05.05.2022 வியாழன் காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை துவாஜா ரோகணம், துர்வதேவேதம் அனைத்து வேதங்களும் ஆசீர்வாதத்துடன் துவங்கி அன்று மாலை திசைக்காட்டுகள் ஆவாகரணம்- இந்திரன், அக்னி, நெருகி, வருணன், எமன், வாயு, குபேரன், ஈசானம் இவர்களுக்கு உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு எழுந்தருளி காத்தருள ஆவாகரணம் செய்யப்படுகிறது. தேர் திருவிழா 2-ம் நாள், 3-ம் நாள் மற்றும் 4-ம் நாள் அழைப்பிதழில் கண்டுள்ளவாறு காலை சுவாமி புறப்பாடும், மாலை சுவாமி புறப்பாடும் வாகனங்களில் புறப்பாடு செய்து திருவீதி உலா வரும் தேர் திருவிழா 5-ம் நாள் செட்டிப்பெண் ஐதீகம் கொண்டாடப்படுகிறது. காலை சுவாமி தாயாக வந்து செட்டிப்பெண் இரத்தினாவதிக்கு மருத்துவம் பார்த்த ஐதீகம் கொண்டாடப்படுகிறது. அதுசமயம் சுகப்பிரசவ மருந்தும் பீஜாதானம் (வரதானம் நெல்) பக்தகோடிகளுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைத் தொட்டிலில் இடும் விழா காலையில் முடிக்கப்பட்டு மாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அறுபத்து மூன்று

 

நாயன்மார்கள் எழுந்தருளச் செய்து தெரு அடச்சான் விழாவாகச் கொண்டாடப்படுகிறது. தேர் திருவிழா 6-ம் நாள் (திருக்கல்யாண வைபவத்தில் அம்மன் காலையில் நந்தவனத் திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், பின்னர் திருக்கல்யாண உற்சவத்திற்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறுகிறது. பிறகு நுாற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதுசமயம் திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாளிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பிறகு பருப்பு வடை, பாயசம், அன்னம் பாலித்து அன்பர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. மாலையில் யானை வாகனம் மற்றும் பல்லக்கில் சுவாமி அம்மன் காட்சிக் கொடுத்தல். 9-ம் நாள் தேரோட்டம், சுவாமி அம்பாள் சோமாஸ் கந்தராக சுவாமி ஒரு தேரிலும் அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் எழுந்தருளச் செய்து, சகல வாத்தியங்களுடன் திருவீதி உலா வரும். தேர்

 

திருவிழா 10-ம் நாள் காலை நடராஜர் புறப்பாடு செய்து, பின்னர் மஞ்சள் நீராட்டு, பாலிகை பூஜை பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பக்குளம் கூடப்பள்ளியில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுகிறது. மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவு ரிஷபாரூடர் காட்சி அன்பர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக தாயான ஈசரால் அருளப்படுகிறது. பின்னர் கொடியிறக்கம், திசைக்கட்டு பூஜை செய்யப்படுகிறது. தேர் திருவிழா 11-ம் நாள் திருக்குறிப்பு தொண்டர் விழா 12-ம் நாள் சிரகிரி, தட்சிணாமூர்த்தி உற்சவ மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை, 13-ம் நாள் பிச்சாண்டார் திருவீதி உலா, 14ம் நாள் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா. 15-ம் நாள் பிரயாசித்தம் அபிஷேகம் ஆகியவற்றுடன் தேர் திருவிழா பூர்த்தியடைகிறது. இதில் குறிப்பாக வருகிற 13ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் காலை, மாலை திருவீதி உலா நிகழ்ச்சிகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தயான ஈசரின் அருள்பெற திருச்சி மெயில் சார்பாக வேண்டுகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.