திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இங்கிலாந்து பெண் பக்தை மயங்கி விழுந்து சாவு
திருச்சி டிச. 18 திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இங்கிலாந்து பெண் பக்தை மயங்கி விழுந்து சாவு
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் சைலேந்திர சவுலா .இவரது மனைவி நிஷா சௌலா (வயது 60). இவர் தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தனர். பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர் .
பின்னர் அண்ணன் தங்கை இருவரும் திருவரங்கம் ரெங்கநாதரை தரிசிப்பதற்காக ரங்கநாதர் கோவிலுக்கு வந்தனர். ரங்கா ரங்கா ராஜகோபுரம் அருகே சென்றபோது நிஷா சாவ்லா திடீரென மயங்கி விழுந்தார். உடனே சகோதரர் அவரை மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நிஷா சவுலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.