அரியூரில் யுரேகா கிராம நூலக விழா

0 279
Stalin trichy visit

அரியூரில் யுரேகா மக்கள் நூலக விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் கிராமத்தில் எய்டு இந்தியா இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் மாலை நேர கற்றல் மையத்தில் யுரேகா கிராம நூலக விழா அரியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் யுரேகா நுலகத்தின் மூலம் தாங்கள் படித்த புத்தக கதைகள் மற்றும் விடுகதைகள் போன்றவற்றை கிராமப் பெற்றோர்களுக்கு போட்டியாக நடைபெற்றது. இதில்
1. விடுகதைகள்.
2. செய்து பார், சுவைத்து பார்.
3. படித்துக் கூறுவதை படமாக வரைதல்.
4. கதைகளை வரிசைப்படுத்துதல்.
5. பார்த்து கதை சொல்லுதல்
7. எளிய அறிவியல் பரிசோதனைகள்.
போன்ற செயல்பாடுகள் மூலம்
குழந்தைகள் பெற்றோர்களிடம் கேட்டு உரையாடினார்கள்.
அதிக புத்தகங்கள் வாசித்த அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களை பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன். வழங்கினார்.

இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இவ்விழாவில் எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். திட்ட மேலாளார் அருண்குமார் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக ஒன்றிய கருத்தாளர் திருமதி எலிசபெத் ராணி வரவேற்றார். இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை அரியூர் கிராம யுரேகா மாலை நேர கற்றல் மைய ஆசிரியர் கிருத்திகா, ஒன்றிய கருத்தாளர் எலிசபெத் ராணி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.