கெமிக்கல் ஏற்றிச்சென்ற டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு

0 383
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஊத்துக்குளியில் நடைபெற்று வரும் பணிகளுக்கு மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டப்பட்டி என்ற பகுதியில் இருந்து பெனட்டின் எனும் கெமிக்கல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ட்ராக்டர் டிப்பருடன் சென்று கொண்டிருந்தது. மதுரை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளநாட்டை அடுத்த கோவில்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து புதரில் மறைந்தது.

இதில் ஓட்டுனர் விஜய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கிரேன் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்து புதரில் மறைந்த ட்ராக்டர் மற்றும் டிப்பர் வெளியே எடுத்து வரப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பலரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.