தடையை மீறி வாடகைக்கு இயக்கிய 4 பைக்குகள் பறிமுதல்!
தமிழகத்தில் மொபட்டுகள், பைக்குகளில் வாடகைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு பயணம் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மொபட் பயணங்களுக்கு என்றே ரேபிடோ போன்ற ஆன்லைன் சாப்ட்வேர்கள் இருக்கிறது. இதனை பயன்படுத்தி விதி முறைகளை மீறி ஆட்களை ஏற்றிச்செல்வது தொடர்கதையாக இருந்தது. இதனை தடுக்க தமிழக போக்குவ ரத்து ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் ஆர்டிஒ குமார்,
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லால்குடி மீரான், துறையூர் சுரேந்திரன் மற்றும் முசிறி இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. இதில் மன்னார்புரத்தில் நடந்த சோதனையின் போது, ரேபிடோ ஆப் மூலம் முன்பதிவு செய்து 4 பைக்குகளில் ஆட்களை வாடகைக்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பைக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.