வையம்பட்டியில் நடைபெற்ற மாபெரும் கண் சிகிச்சை முகாம்
திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சியில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று (13.07.2024 ) காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
வையம்பட்டி டவுன் ஜே சி ஐ மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வையம்பட்டி ஊராட்சியில் குரு திருமண மஹாலில் மாபெரும் கண் சிகிச்சை முகாமில் நடைபெற்றது.
இந்த கண் சிகிச்சை முகாமிற்கு வையம்பட்டி ஜேசிஐ டவுன் தலைவர் மகாமுனி தலைமையில் வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஜே சி ஐ மண்டல இயக்குனர் ஜெகதீஷ் , ஜே சி யை சாசன தலைவர் செந்தில் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செயின்ட் மேரி மற்றும் சூர்யா பேரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் முகாம் ஒருங்கிணைத்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் வினித் குமார்,டாக்டர் அகல்யா ஆகியோர் கண் பரிசோதனை செய்தனர். 370 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் மருத்துவமனை வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.