சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயிலில் பயணம்

0 450
Stalin trichy visit

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 19.05.2022 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை புறப்பாடு

1. 50 கிலோ பொட்டாஷ் ரூ.950/-க்கு விற்றதை ரூ.1700/-க்கு மத்திய அரசு விற்கிறது. 50 கிலோ நெல் ரூ.980/-க்கு விற்றது ரூ.1030/- விற்கிறது. இதில் லஞ்சமாக எடுத்து கொள்வது ரூ.100/- விவசாயிகள் வாழ்வதா.? சாவதா.?

2. 100 நாட்கள் வேலை ஆட்களை வருடத்திற்கு 7 மாதத்திற்கு அரசு 100 நாள் வேலை கொடுத்து கோடை காலங்களில் காப்பாற்று, மழைகாலங்களில் 5 மாதங்களுக்கு விவசாய வேலைக்கு (நடவு, களை எடுப்பு) பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

3. இந்திய ஜனத்தொகை 140 கோடியில் விவசாயிகள் 95 கோடி பேர், இதில் இந்து விவசாயிகள் 90 கோடி பேர்கள் இவர்களுக்கு 2 மடங்கு இலாபகரமான விலை கொடுப்பதாக கூறிய மாண்புமிகு. மோடி அய்யா நெல் கிலோவுக்கு ரூ.18/-க்கு விற்றத்தை ரூ.54/- தருவதாக கூறிவிட்டு கொடுப்பது ரூ.20/-, கரும்பு ஒரு டன் ரூ.2,700/-க்கு விற்றத்தை ரூ.8100/- தருவதாக கூறிவிட்டு கொடுப்பது ரூ.2900/- இது நியாமா..? வேஷ்டி, சட்டை, புடவை, ஜட்டியை கழட்டிக்கொண்டார்களா..? இல்லையா..? இலாபகரமான விலையை கொடுங்கள், இல்லையெனில் டெல்லியில் விவசாயிகள் சட்டை, கோவணத்தை பிடிங்கி கொண்டதால் அது இல்லாமல் போராட அனுமதி கொடுங்கள், கோதாவரி-காவிரி இணைப்புக்கு நிதி ஒத்துக்காதது ஏன்? நிதி ஒதுக்கி தமிழக விவசாயிகளை வழவிடுங்கள்.

4. மாவட்ட ஆட்சியர், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர்(MD), இணைப்பாதிவாளர்(JR) ஆகியோர்கள் கூறினாலும் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர்கள் Scale of Finance-ன்படி விவசாயிகளுக்கு கடனும், வாழைக்கு மூங்கில் வாங்க கடன்கொடுக்காமல் மறுப்பதை கண்டித்தும்,

5. தனியார் நிதி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டிபோட்டு கட்டவில்லை என்று விவசாயிகளின் வாகனங்களை திருடி செல்ல கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியும் திருடுபவர்களை தடுக்க வேண்டியும்,

6. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்(DPC) வருடமுழுவதும் லஞ்சம் வாங்காமல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டியும்,

7. ஓடை, ஏரி, வாரி, குளம், வாய்கால், ஆறுகளில் உள்ள காட்டு கருவமுள்களை அகற்றி ஓடையை, வாரியை திருட்டுதனமாக தரிஷாக மாற்றி பட்டா வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரியும்,

8. கரும்புக்கு தரவேண்டிய பாக்கியை பெற்றுதரகோரியும், வருடா வருடம் கரும்பை வெட்டிவதற்கு உரிய நடவடிக்கை வேண்டியும்,

9. திருச்சிமாவட்டம் மணப்பாறை ஒன்றியம் அருகே கரும்புலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் தன்னுடைய நிலத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள டிராக்டர் வாங்குவதற்க்காகவும் மற்றும் பைப்லைன் அமைப்பதற்கும், கரும்பு சாகுபடி செய்வதற்காகவும் குளித்தலை பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.14,00,000/- கடன் பெற்றார். அதனை தவணை முறையில் ரூ.7,50,000/-மும், கரும்பு வெட்டி அனுப்பியத்தில் ரூ.7,50,000/-மும் திரும்ப வங்கிக்கு செலுத்தி விட்டார். வறட்சி மற்றும் கொரானா காலத்தில் மீதமுள்ள வட்டிதொகையை திரும்ப செலுத்தமுடியாத நிலையில் இருந்து வந்தார். ஆனால், வங்கி நிர்வாகம் மீதத்தொகைக்காக வட்டிக்குமேல் வட்டிபோட்டு ரூ.58,00,000/- செலுத்த வேண்டும் என்று கூறி DRT கோர்ட்டில் வழக்குபோட்டு ஒருபட்சமாக தீர்ப்பு வாங்கி, மேற்படி விவசாயி வங்கியில் கொடுத்த 11 ஏக்கர் நிலத்தை அவருக்கே தெரியாமல், அவரை கேர்க்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.58,00,000/-க்கு ஏலம் விட்டத்தை கண்டித்தும்,

10. தனியாரிடம் விவசாயிகள் இன்சூரன்ஸ் பணம் கட்டிய பிறகும், பயிர் அழிந்தாலும், உடனடியாக நஷ்டஈடு வழங்கத்தாதற்கு காரணம், தனியார் லாபத்தை நோக்கி இருப்பதால்தான். எனவே, அரசே விவசாயிகளிடம் இன்சூரன்ஸ் தொகையை வசூல் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

11. இலாபகரமான விலை கொடுக்கும் வரை விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும்,

12. தமிழக அரசு மேற்கு தொடர்ச்சி மலையை கேரளாவுக்கு தாரை வார்க்க கூடாது. எல்லா இடத்திலும் அதுக்கள் ஊன்ற வேண்டும்.

13. காரையார், குண்டாறு, எலுமிச்சை ஆறு, மணிமுத்தாரில் ஓடும் தண்ணீரை குழாய் மூலமாக இணைக்க வேண்டும்.

14. திருநெல்வேலி மாவட்டம் சொரிமுத்தனார் கோவில் இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யக்காண்ணு BABL அவர்களின் தலைமையில் விவசா
யிகள் 19.05.2022 வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.