அறுவை சிகிச்சை முடிந்த கையோடு போராட்டத்திற்கு வந்த விவசாயால் பரபரப்பு

0 556
Stalin trichy visit

திருச்சியில் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு போராட்டத்திற்கு வந்த விவசாயால் பரபரப்பு -எனக்கு என் உயிரை விட விவசாயம் தான் முக்கியம் என கொந்தளிப்பு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், தாயனூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என தாயனூர் கிராம மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்ட ஒன்றியம் தாயனூர் கிராமம் 95 சதவீத விவசாய நிலத்தை சார்ந்தது தாயனூர் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க எந்த ஒரு தகுதியும் இல்லாத கிராமம். எனவே மாநகராட்சி உடன் இணைப்பதை கைவிட வேண்டும் மாநகராட்சி உடன் இணைத்தால் விவசாய நிலம் பிளாட்டுகளாக மாறும் வரி உயர்வு ஏற்படும், வரி கட்டுகிற அளவிற்கு எங்களது கிராமங்களுக்கு வருமானம் இல்லை, எங்களுக்கு ஊராட்சியை போதுமானது. எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லை என்றால் வருகிற சுதந்திர தினம் அன்று ஊர் முழுவதும் கருப்புக்கொடி கட்டி தபால் நிலையம், ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றை பூட்டு போட்டு பூட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஒரு நபர் இதய அறுவை சிகிச்சை முடிந்த கையோடு போராட்டத்திற்கு வந்து கலந்து கொண்டு உள்ளார். என் உயிரை விட விவசாயம் தான் முக்கியம் என போராட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் .

Leave A Reply

Your email address will not be published.