லைக்ஸ் – வியூஸ்க்காக உயிரை பணயம் வைக்கின்றனர் : இயக்குநர் சீனு ராமசாமி
திருச்சி, ஜூன் 2 லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக உயிரை பணயம் வைக்கின்றனர் பணம் வருது என்பதற்காக பல அற்பத்தனமான விஷயங்களை செய்கின்றனர் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது, அந்த வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் “புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க” என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பங்கேற்று சிறந்த படைப்பாளர்களுக்கு விருது வழங்கினார் தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசுகையில்..
“இந்த நிகழ்விற்கு என் தாய் கோவிந்தம்மாள் அழைத்தது போலவே எனக்கு உணர்ந்தது. சமூகத்தில் நாம் செய்ய வேண்டிய முதல் பணி — புகையிலை எதிர்க்கும் பணியாக இருக்க வேண்டும். மனிதனாக பிறந்த அனைவரும் முதலில் புகையிலையை எதிர்க்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
இத்தனை திரைப்படங்களை எடுத்துள்ள எனக்கு, ‘புகையிலை எதிர்த்து ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை?’ என்று என் தாயார் கேட்டதுபோல் உணர்ந்தேன்.
மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்கள், நான் எழுதிய ஒரு வசனத்தை திரைப்படத்தில் கூறியிருந்தார். அந்த வசனம்: ‘உடம்பில் உண்டாகக்கூடிய வலியை நீக்குபவன் தான் கடவுள். நீங்கள் உண்மையோடு, ஆசைகள் இல்லாமல், நேர்மையாக இந்தத் துறைக்கு வந்திருந்தால், நீங்களும் கடவுளாகலாம்.’ அந்த வசனம் எனது எழுத்து. உண்மையிலேயே, வலியை நீக்குபவர்களே கடவுள். அந்த வகையில், மருத்துவர்களே கடவுள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும். புற்றுநோயால் இறந்தவர்கள் குறித்து நான் பிராத்தனை செய்வேன் காரணம் — அவர்கள் ஒரு பெரிய வலியில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள் என நம்புகிறேன்.
ஆரம்ப நிலை புற்றுநோயை கண்டறிந்து, அதில் இருந்து மக்களை காக்கும் பணியை செய்பவர்கள் மகத்தான பணி செய்கிறார்கள். அந்த வகையில் இந்த புண்ணியப் பணியை செய்து வரும் ஹர்ஷ மித்ரா பல்லாண்டு வாழ்க. நானும் ஒரு காலத்தில் புகை பிடித்தவன் தற்போது அதை விட்டுவிட்டேன் எந்த ஒரு மனிதனும் காலையில் குளித்து சாமி கும்பிட்டு விட்டு இன்று சிகரெட் பிடிக்க போகிறேன் என கூறி கடைக்கு சென்று சிகரெட் வாங்குவது இல்லை
தெரிந்தவர் யாராவது மாப்ள சிகரெட் சிகரெட் பிடி என கூறுவான் அல்லது அவனைப் பார்த்து நாம் கற்றுக் கொண்டிருப்போம் அல்லது எனது திரைப்படத் துறையை சார்ந்தவர்கள் ஸ்டைல் மாஸ் என ஊக்கப்படுத்தி இருக்கலாம் என கூறினார். மேலும் ரீல்ஸ் என்ற பெயரில் நம் ஆட்கள் கொட்டமடித்துக் கொண்டுள்ளனர். எல்லாத்தையும் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு உள்ளனர் படிக்கிற சமூகம் பார்க்கிற சமூகமாக மாறி வருகிறது இளைஞர்கள் கையில் ரீல்ஸ் என்பது ஆயுதமாக உள்ளது இதனால் கெட்டுப் போனவர்கள் பலர் உள்ளனர்
லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக உயிரை பணயம் வைக்கின்றனர் பணம் வருது என்பதற்காக பல அற்பத்தனமான விஷயங்களை செய்கின்றனர் இப்படி இளைஞர்கள் கையில் உள்ள ரீல்சை சமூகத்திற்கு நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தலாம் என ரீல்ஸ் போட்டியை வைத்துள்ளனர் என பேசினார்.
இந்த நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் , கல்லூரி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்