திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல்
திருச்சி, ஜூலை 15 திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல்
கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு
திருச்சி விமான நிலையத் திற்கு வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் விமா னங்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. இவ்வாறு இயக்கப் படும். விமானங்களில் அவ் வப்போது போதை பொருட் கள், தங்கம், அரிய வகை உயிரினங்கள் போன்றவை கடத்தப்பட்டு வருவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்வ தும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மலேசிய தலைந கர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகளை சுங்கத்துறை அதிகாரி கள் சோதனை செய்தனர்.
அப்போது திருச்சி நத் தர்ஷா பள்ளிவாசல் பகு தியை சேர்ந்த ஹைதர் அலி(வயது 41) என்பவர் தனது உடைமையில் மறைத்து, ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப் பிலான 6.20 கிலோ ஹைட் ரோ போனிக் எனும் போதைப்பொருளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட் டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரி கள், இது குறித்து அந்த பய ணியிடம் விசாரணை மேற் கொண்டனர். அப்போது திடீரென ஹைதர் அலி, அருகில் இருந்த பொருளை எடுத்து கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை சிகிச் சைக்காக திருச்சி அரசு மருத் துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.