இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா..

0 396
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. திரளான பக்தர்கள் பூ தட்டுகளை ஏந்தி வந்தனர்.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசிமாத தேரோட்ட விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா . காலை 9 மணிக்கு மேல் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவில் முன்புறத்தில் இருந்து பூ தட்டுகளை ஏந்தி மேளதாளங்கள்,வான வேடிக்கைகள் முழங்க ஆதிமாரியம்மன் கோவில் தேரோடும் வீதியில் வலம் வந்து கோவிலுக்குள் வந்தடைந்தனர்.

அதனை த்தொடர்ந்து கோவில் குருக்கள் ஒவ்வொரு தட்டுகளாக வாங்கி ஆதி மாரியம்மனுக்கு பூக்களை சாற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்களும், திரளான பக்தர்களும் பூக்களை தட்டுகளில் ஏந்தி கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர். காலையில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர். இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.மேலும் ஆதி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள்,கோயில் குருக்கள்கள்,கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.