ஸ்ரீ ஆதி நாயக பெருமாள் கோவிலில் கும்பாபிஷே விழா..

0 385
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்கா கோபுரப்பட்டி ஸ்ரீ ஆதி நாயக பெருமாள் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யோகா நரசிம்மர் ஸ்ரீ சூரியன் உஷா தேவி சன்னதிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,1323 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது திருக்கோவிலில்1342 இல் ஹெய்சாள மன்னரான மூன்றாம் வீர வெல்லாளன் காலத்தில் ஒரு முறையும் 1498 இல் இலங்கை உலகம் என அறியப்பட்ட தோழப்பன் என்பவர் ஒரு முறையும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது,
மேலும் பிரசித்தி பெற்ற இந்தத் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்றது.இந்த நிலையில் இக்கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டு முன்புறம் சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் அருள்பாலிக்கும் விக்கிரகம் நவகிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன் உஷா தேவி விக்கிரக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம கோவில் கமிட்டினர் மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன் தின இரவு யாகசாலை பூஜை நடைபெற்றது. அனுக்ஞை வாஸ்து ஹோமம் விஸ்வக்ஸேநர் நிவேதனம் சாற்றும் முறை நடைபெற்றது தொடர்ந்து முதல் கால பூஜை நடைபெற்றது. முன் தினம் காலை 8:45 மணி முதல் பகல் 12 மணி வரை பூர்ணாஹுதியும் இரண்டாம் கால பூஜை,மாலை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. காலை 7:30 மணி முதல் த்வார, கும்ப மண்டல பூஜை, பிராண பிரத்திட்டை, சாந்தி ஹோமம், மற்றும் மகாபூர்ணஹுதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு கிரகங்கள் புறப்பட்டு 9:45க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம கோவில் கமிட்டினர் தலைவர் அனந்தராமன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கணேசன், சங்கர்,வைத்திலிங்கம், தனபாலன், பூபதி, குருசாமி, அதியமான்,மற்றும் உறுப்பினர்கள் செய்தனர், இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.