பெண்ணின் கழுத்தில் அரிவாளை வைத்து செல்போன், 2 லிட்டர் கடலை எண்ணெய் பறிப்பு!

0 360
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகரில் தனியார் ஆயில் மில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஆட்டோவில் வந்து 2 மர்ம நபர்கள் கடையின் உரிமையாளரான காட்டூரை சேர்ந்த் விஜயகாந்த்(வயது39) எங்கே எனக் கடையில் வேலை பார்க்கும் பாலாஜி நகர் 12வது குறுக்கு தெருவை சேர்ந்த ரூபா (வயது 30) என்ற பெண்ணிடம் கேட்டு உள்ளனர். அதற்கு ரூபா விஜயகாந்த் கடையில் இல்லை என கூறிஉள்ளார். மார்மநபர்கள் இரண்டு பேரில் ஒருவர்

மீன் வெட்டும் கத்தியை ரூபாவின் கழுத்தில் வைத்து வெட்டி விடுவேன் எனக் ரூபாவை மிரட்டியதோடு இரண்டு லிட்டர் கடலை எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் ரூபா வைத்திருந்த செல்போனை பிடுங்கி கொண்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் விஜயகாந்திற்கு ஸ்ரீரங்கம் இரண்டாவது கோபுரம் அருகே
இதேபோன்று ஆயில் கடை உள்ளது. அந்த கடையிலும் இதே மர்ம நபர்கள் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணி அளவில் இது போன்ற சம்பவத்தை செய்துள்ளனர்.
இரண்டு சம்பவங்கள் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் விஜயகாந்த் கொடுத்த புகாரின்படி திருவெறும்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி அருகே உள்ள பேரூர்

அக்ரஹாரத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 35), திருச்சி மலைக்கோட்டை கீழஆண்டாள் வீதியைச் சேர்ந்த காளிதாஸ்(வயது 32) மற்றும் ஆட்டோ டிரைவரான மேல தேவதானத்தை சேர்ந்த சுதாகர் (வயது 30) என்பது திருவெறும்பூர் போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சுதாகரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கடையில் இதுபோல் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் சக்திவேல் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வழக்கில் தொடர்புடையதாக மலைக்கோட்டை சேர்ந்த
மாரீஸ்வரன்(வயது 20), கீழ தேவஸ்தானத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 28),

மலைக்கோட்டை மேல வீதியை சேர்ந்த மாதுபோத்தீஸ்வரன் (வயது 25)
ஆகிய 3 பேர் உட்பட 5 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் திருவெறும்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் முறையாக விசாரணை செய்த பிறகு இந்த வழக்கின் காரணம் என்னவென்று தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.