குற்றச்சாட்டை தொடர்ந்து சத்திரம் பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ் ஆய்வு!

0 640
Stalin trichy visit

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் தான் வெற்றி பெற்றதில் இருந்து மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார். இதனால் அவருக்கு பெரிதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல், பஸ்கள் முறையாக நிறுத்தி செல்வதில்லை மற்றும் சாலையோர கடைகள் நடைப்பாதைகளை ஆக்கிரமித்துள்ளன போன்ற குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு நேரடி ஆய்வு மேற்கொண்டார். இதில் குறிப்பாக அலுவல் நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா?, மாணவர்கள் முறையாக பயணம் செய்ய ஒழுங்குபடுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனரா?, பஸ் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டு உள்ளதா?,

மேலும் ஏதேனும் பயணிகளுக்கு தேவைப்படுகிறதா?, பஸ்கள் அனைத்து ஒழுங்காக நிறுத்தப்படுகின்றனவா? என ஆய்வு செய்தார். மேலும் பயணிகளின் தேவைகளை அறிந்து அவற்றை உடனே நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து சத்திரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பழவகை கடைகள், பூக்கடைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு பயணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்க வேண்டும். மேலும் கடைக்கு வருபவர்கள்

தங்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, கோட்டத் தலைவரும், மலைக்கோட்டை பகுதி செயலாளருமான மதிவாணன், புனித வளனார் பள்ளி முதல்வர், நேஷனல் பள்ளி முதல்வர், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.