கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த சின்னமுத்தம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சரத்குமார்(வயது 24). இவர் திருச்சி எ.புதூரில் உள்ள நிதி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இதில் அப்பகுதியில் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த வீட்டின் கீழ் பகுதியில் 14 வயது மகளுடன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் அடிக்கடி பேசுகையில், சிறுமியுடன் சரத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனைபயன்படுத்தி
சிறுமிக்கு சரத்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை செல்போனில் பதிவு செய்த சரத்குமார், அதனை காட்டி சிறுமி, பெற்றோரையும் மிரட்டியுள்ளார். இதையடுத்து கன்டோன்மென்ட் மகளிர் போலீசில் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை அடுத்து வழக்குப்பதிந்த
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேத வள்ளி, போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.