வனத்துறையினர் “கெட்அவுட்” விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டென்சன் ஆன கலைக்டர்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனத்துறையினரை கெட் அவுட் என்று வெளியேற்றிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்
வனத்துறை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்பதற்காகவும், தீர்வுகாண வேண்டிய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் உதவி வன பாதுகாவலரை வரச் சொல்லி கடந்த முறை கூட்டத்தில் ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கிய நிலையில் இன்றைய கூட்டத்தில் மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் வனத்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட இருவரும் வராததால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூட்டத்துக்கு வந்திருந்த வனத்துறை அதிகாரிகளை ‘கெட் அவுட்’ என்று கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினார்.