இரு தரப்பினரிடையே தகராறு 3 பேர் காயம் – 2 பேர் கைது

0 279
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சுனைப் புகநல்லூரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் படுகாயம். 2 பேர் கைது.

மண்ணச்சநல்லூர் அருகே வயல் நெய்வேலி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான சிவகுமார். இவரது மனைவி நாகவல்லி. தந்தை 65 வயதான தங்கராஜ். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே சுனைபுகநல்லூர் குடி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் 26 வயதான ஆனந்த் மற்றும் பழனி மகன் 24 வயதான தினேஷ். இந்நிலையில் ஆனந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் சிவகுமார் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் ஆரன் சத்தமாகவும் அடித்துக்கொண்டு வீட்டை திரும்பி திரும்பி பார்த்து நோட்டமிட்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுகாம்பூர் கடை வீதிக்கு சென்று விட்டு மீண்டும் அதே வழியாக வரும்போது இருவரையும் மறித்த சிவகுமார் எதற்காக ஆரன் அடித்துக் கொண்டும் வீட்டை நோட்டமிட்டு சென்றீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இது தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிவகுமார் அருகில் இருந்த கட்ட எடுத்து முதலில் ஆனந்த் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்பு தினேஷ் மள்றிம் ஆனந்த இருவரும் அருகில் இருந்த கட்டை மற்றும் கம்பை எடுத்துக் கொண்டு சிவகுமாரை தாக்கியுள்ளனர்.இவரது சத்தம் கேட்டு வீட்டிலிருந்த சிவகுமாரின் மனைவி நாகவல்லி மற்றும் சிவகுமார் அப்பா தங்கராஜ் ஆகியோர் தடுத்தபோது அவர்களையும் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் சிவக்குமார் அவரது மனைவி நாகவல்லி அப்பா தங்கராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்து ஸ்ரீ ரங்க அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் ஆனந்த் மற்றும் தினேஷை கைது செய்தனர். பின்னர் முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.