காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து அதே இடத்தில் இயங்க செய்யவேண்டும் : வணிகர் சங்கங்களின் பேரவை தீர்மானம்
திருச்சி, நவ.10 காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து அதே இடத்தில் இயங்குவதற்கு உறுதியான அனுமதி தர வேண்டும் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழுவில் தீர்மானம்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி எடமலைப் பட்டி புதூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவை மாநில தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் மாமுண்டி கூழையன் வரவேற்புரை வழங்கினார்.
மாநில அவை தலைவர் தேவராஜ், மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சுதேசி நாயகன் படத்திறப்பு விழா நடைபெற்றது. இறுதியாக மாநில தலைமை நிலைய செயலாளர் தென் சென்னை மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
மாநில பொருளாளர் G.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சுதேசி நாயகன் வெள்ளையனுக்கு மணிமண்டபம் கட்டி, முழு உருவ வெண்கல சிலையை அமைக்க வேண்டும்.
மகாத்மா காந்தியடிகளால் திறக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க திருச்சி காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து தந்து, இடமாற்றம் செய்யாமல் அதே இடத்தில் வியாபாரிகள் வணிகம் செய்ய உறுதியான அனுமதி தர வேண்டும்.
கும்பகோணம் இரயில் நிலையத்தில் 65 வருடங்களாக இயங்கி வந்த RMS-யை திரும்ப திறக்க வேண்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி, மேலும் டூ வீலர் பார்க்கிங் கட்டணத்தை குறைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
பேரவையின் மாவட்ட தலைவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாநில நிர்வாகிகளை கண்டிப்பாக அழைக்க வேண்டும். தலைவர், செயலாளர், பொருளாளர் புகைப்படத்தை கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
பேரவையில் ஒரு லட்சம் வணிகர்களை வரும் 2026 மே 5 மாநாட்டிற்குள் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
நச்சுத்தன்மை நிறைந்த பெப்சி, கொக்கோகோலா போன்ற அந்நிய குளிர்பானங்களை தமிழ்நாட்டில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவன தலைவர் சுதேசி நாயகன் மறைந்த வெள்ளையன் பெயரில் த.வெள்ளையன் அறக்கட்டளை பேரவையின் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலமாக நமது பேரவையின் உறுப்பினர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டும்.
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சுதேசி நாயகன் வழியில் எந்த காலத்திலும் அரசியல், ஜாதி, மதம் சார்ந்து இருக்காது.
சங்க உறுப்பினர்களுக்கு பேரவை சார்பில் விபத்து காப்பீடு, மருத்துவ காப்பீடு, உயிர் காப்பீடு போன்றவை இலவசமாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
பேரவையில் உள்ள வணிகர்களுக்கு பன்மடங்கு பயன்பெறும் வகையில் செயலி (app) business to business செயலி தொடங்கப்பட்டுள்ளது. அந்த செயலி மூலமாக அனைத்து வியாபாரிகளும் பயன்பெற வேண்டும்.
பேரவையின் சுதேசி கொள்கையான உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்த சுதேசி மளிகை என்ற செயலி (APP) மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்து நமது பேரவையில் உள்ள உறுப்பினர்களின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
நமது பேரவைக்காக சுதேசி நாயகனோடு பயணித்த நலிவடைந்த உறுப்பினர்களை கண்டெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
உள்நாட்டு வர்த்தகத்தை சீர் குலைக்க கூடிய பிலிங்கிட், இன்ஸ்டா மார்ட், மீசோ blink it instamart meeso போன்ற அந்நிய வர்த்தக நிறுவனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது.
பேரவை வளர்ச்சிக்காக ஆயிரம் கரங்களை இணைத்து பேரவை நலன் காக்க நினைக்கும் த.வெள்ளையன் அறக்கட்டளை திட்டத்தில் இணைந்து பேரவை கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
சுதேசி நாயகன் வாழ்ந்த தெருவிற்க்கு த.வெள்ளையன் சாலை என மாநில அரசு பெயர் சூட்டிட வேண்டும். சமீபகாலமாக தமிழகத்தில் அராஜகமான மாமுல் கேட்டு வசூலிக்கும் ரவுடிகளை மாநில அரசு கடுமையான சட்டம் இயற்றி தண்டிக்க வேண்டும்.
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மீது GST வரியையும், மருத்துவத்திற்கான GST வரியையும் முற்றிலும் குறைக்க வேண்டும்.
விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ள சுங்க சாவடிகளை மத்திய மாநில அரசுகள் முற்றிலும் அகற்றி தர வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்ற அரசு உடனடியாக அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளை மத்திய மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும்.
வணிகர்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்புகள். சாலையோர வியாபாரிகளுக்கும் சிறு, குறு வணிகர்களுக்கும், சகோதரர் உறவை மேன்மைப்படுத்திட சாலையோர வியாபாரிகளுக்கு தனியிடம் ஒதுக்கி தர வேண்டும்.
மனிதர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டிருக்கின்ற ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மார்க்கெட் எஸ்.வெங்கடேசன், பெருமாள் சங்கர், S.டேவிட், ரூபன் கோவிந்தராஜ் , M.நௌஷாத், S.P. சரவணன், P.சங்கர், கன்டோன்மென்ட் கார்த்திக், வீரசேகர் நாகராஜ், பிரவின்குமார், தமிழ், சாமுவேல், ஜெயசீலன், அரவிந்த், லால்குடி கார்திக், மார்க்கெட் மாரிமுத்து, வரகனேரி மோகன், மார்க்கெட் ஹரி, சிம்க்கா ரேவந்த், டோல்கேட் விவேகானந்தன் , வம்சம் ப்ராப்பர்ட்டி அஜ்முகமது, அப்துல் கலாம், அபுல் ஹாசன், ஹசன், பிரசாத் உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.