பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம்

0 585
Stalin trichy visit

F¼„C, Ýè.12  திருச்சி மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷனின் 27 வது பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு சிட் பண்ட் கம்பெனி அசோசியேஷன், இன் கார்ப்பரேட் சிட் பண்ட் அசோசியேஷன் மற்றும் திருச்சி மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷனின் 27 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள பி எல் ஏ கிருஷ்ணா ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார் செயலாளர் கோபாலகிருஷ்ணன் பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு சீட்டு கம்பெனிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ண பாரதி, செயலாளர் செந்தில்குமார், இன் கார்ப்பரேட் சிட்பண்ட்ஸ் சங்கத்தின் தலைவர் சிற்றரசு செயலாளர் உமா பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர். அவரைத் தொடர்ந்து இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து சீட்டு தொழிலை மேம்படுத்துவது குறித்தும் அரசிடம் ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் நாகராஜன் சேதுபதி சிறப்புரையாற்றினார் மேலும் கல்யாண மாலை பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியை கபிலா விசாலாட்சி வாழ்வில் வெற்றி பெற என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த மண்டல பொதுக்குழு கூட்டத்துக்கு திருச்சி பெரம்பலூர் அரியலூர் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பதிவு சீட்டு தொழில் புரியும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.