செங்கல்பட்டு – நெல்லை இடையே திருச்சி வழியாக சிறப்பு ரயில்
திருச்சி, ஆக. 12 திருச்சி கோட்ட ரயில்வே நிருவாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு, நெல்லைக்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, நெல்லையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஆக.13 மற்றும் 18ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06020) மறு நாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடை யும். மறுமார்க்கமாக (வண்டி எண்: 06019) செங்கல்பட்டில் இருந்து வருகிற 14 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய நாட்களில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரயில் கோவில் பட்டி, சாத்தூர்,விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.