அரசு மருத்துவமனை போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க கோரிக்கை

0 269
Stalin trichy visit

திருச்சி புத்துர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் பல இயங்கி வருகின்றன.  தற்போது அரசு மருத்துவமனைக்கு முன்பு உள்ள சாலையில் குடிநீர் குழாய் பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகளுக்காக தோண்டபட்ட சாலைகளினால் அப்பகுதி முழுவதும் மண்,புழுதிகளால் மாசடைந்துள்ளன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் உள்நோயாளிகள், புற நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழுந்தைகளும் பெரும் சுவாச பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அதனால் அரசு பொது மருத்துவமனை பகுதியில் நடைபெறும் பராமத்து மற்றும் சாலைகள் சீரமைக்கும் பணிகளை போர்கால அடிப்படையில் விரைந்து முடித்து அரசு பொது மருத்துவமனை சிகிச்சைக்கு வரும் பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சாலை பயனீட்டாளர்களின் உயிர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.