முதியோர் ஓய்வூதியம். ஏழைகள் பயன்பெறும் திட்டத்தை பணக்காரர்கள் பணம் பார்க்கும் திட்டமாக மாற்றியது அதிமுக ஆட்சி. – ஓ பி எஸ் ஸுக்கு. இடிமுரசு இஸ்மாயில் கண்டனம்

0 236
Stalin trichy visit

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்  வெளியிட்டுள்ள   அறிக்கையில்,
தமிழகத்தில் வருமானம் இல்லாமல் ஒருவேளை சோறு சாப்பிட வழி இல்லாத வாழ்வதற்க்கு வக்கற்று வகையற்று திக்கற்று திசையற்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்ற ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஏறதாழ 32 லட்சம் பேர் தமிழக அரசின் உதவித்தொகைகளை பெற்று வருகிறார்கள்.
ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்காக தொடங்கப்பட்ட இத்திட்டம் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அதிமுக கட்சியினர் பயன்பெறும் திட்டமாக மாற்றப்பட்டு, மாடி வீட்டு குபேரர்களும், பல ஏக்கர் நிலம் வைத்துக் கொண்டு கார் பங்களா வைத்துள்ள பணக்காரர்களும் பயனடையும் வகையில் மாறிவிட்டது. 32 லட்சம் பேரில் சுமார் 10 லட்சம் பேர் பணக்காரர்களாக உள்ளார்கள் என்பதுதான் உண்மையாகும்.
ஏழைகள் மட்டுமே பயன்பெறக்கூடிய முதியோர் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து வசதியானவர்களை நீக்க நடவடிக்கை எடுத்துவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களை பாராட்டுகிறேன்.
நெல்லுக்கு இறைக்கும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதை போன்ற நிலையை மாற்றி புல்லுக்கே தண்ணீர் போவதை போல பணக்காரர்கள் பயணடைய அதிமுக கட்சிக்காரர்கள் பயனடைய செய்த முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் களை எடுப்பதின் மூலம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணச் செய்யும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நாடு போற்றும் நல்லாட்சிக்கு புகழ்மிக்க பொற்கால ஆட்சிக்கு மக்கள் அளித்து வரும் மகத்தான ஆதரவை கண்டு மனம் பொருக்க முடியாமல் அறிக்கை வெளியிட்ட அ.இ.அ.தி.மு.க ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன். மாண்புமிகு முதல்வர் எடுத்துவரும் நல்ல நடவடிக்கைகளை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

 

Leave A Reply

Your email address will not be published.