அரசு போக்குவரத்து கழக தொழில் பழகுநர் பயிற்சி; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

0 730
Stalin trichy visit

அரசு போக்குவரத்து கழகம் மூலம் நடத்தப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கிளை சார்பில் தென்மண்டல தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக இயந்திரவியல், தானியாங்கிவியல், பொறியியல் பட்டம் மற்றும் பட்ட படிப்பு முடிந்து ஓராண்டுக்காண தொழில் பழகுனர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தின் மூலம் தகவல்களை பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 2019 2020 2021 ஆண்டுகளில் பட்டம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.