ரூ.11.85 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர்கள் வழங்கினர்
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி கலையரங்கத்தில் இன்று (25.01.2023) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 1988 பயனாளிகளுக்கு ரூபாய் 11.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு மென்பொருளை துவக்க வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு. வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், கதிரவன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி, மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்