முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
முசிறியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆனந்த் முன்னிலை வகித்தார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செவித்திறன் பரிசோதகர் துரைப்பாண்டி அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சந்திரகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் தங்கள் துறைசார்ந்து வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம் கோட்ட அளவில் நடத்த கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் உண்டாக்கி தர கோரிக்கை வைத்தனர். முகாமில் மூன்று நபர்களுக்கு காதொலிக்கருவிகளும், செல்போன் ஒரு நபருக்கும், மடக்கு ஊன்றுகோல் ஒரு நபருக்கும், இயற்கை மரண ஈமச் சடங்கு தொகை ரூ17 ஆயிரத்திற்கான காசோலை ஒரு நபருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை குறித்து மனு அளித்தனர். இந்த முகாமில் முசிறி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் பெருமளவு பங்கு பெற்றனர்.