அமைச்சர் கே.என் நேருவுக்கு குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் வாழ்த்து

0 835
Stalin trichy visit

திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு இன்று நவம்பர் 9-ம் தேதி 70-வது பிறந்தநாள். வயது 70-ஐ தொட்டாலும் அவரிடம் உள்ள சுறுசுறுப்பும், வேகமும், 50 வயதுடையவரை போல் தான் காட்டும் அமைச்சர்.

ஆண்டுதோறும் தனது பிறந்தநாளன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கையோடு, விமானம் பிடித்து திருச்சிக்கு சென்று அங்கு தனது ஆதரவாளர்களின் வாழ்த்து மழையில் நனைவது கே.என்.நேருவின் வழக்கம்

 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை மாநகரம் முழுவதும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.

 

இந்த நிலையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் திருச்சி குணசீலம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன், அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து‌ பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.