உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் புதிதாக செய்யப்பட்ட தேரில் ஊழல் – இந்து முன்னணி குற்றச்சாட்டு
திருச்சி உறையூர் பகுதியில் பிரசிதிபெற்ற பஞ்சவர்ணசுவாமி திருக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழா தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி மிகவும் சிறப்பான திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வானது வருகிற 11/6/22 அன்று நடைபெற உள்ளது.
சோழ மன்னர்கள் காலத்தைய தேர் அழிந்ததற்கு பின்பு சுமார் 60 வருடங்களாக சாமி சவுக்கு மர கட்டைகளால் செய்த தேரில் தான் பவனி வந்தது பல வருங்களுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு பல லட்சம் செலவு செய்து புதிதாக தேர் செய்யப்பட்டது.
பின்பு தேர் வெள்ளோட்டம் மற்றும் ஒரு முறை தேர்பவனியும் நடைபெற்றது.இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக இந்த தேர்த்திருவிழா கொரோனா காரணமாக நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் தேர்த்திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுகிறது ஏனென்றால் பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்டு உள்ள நிலையில் இப்போது தேரின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது.
ஆனால் தேர் செய்து 4 வருடங்களிலே பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது அந்த அளவிற்கு தரமற்ற மரங்களை வைத்து தேர் செய்துள்ளார்கள்.
இதிலுமா ஊழல் இந்து சமயஅறநிலையத்துறை எல்லா செயல்களும் சரியாக செய்வதுபோல காண்பிக்கும் ஆனால் உள்ளே ஊழல் நடைபெற்றுள்ளதாக #இந்து_முன்னணி அமைப்பினர் கருதுகின்றனர்.
உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இதைப்பற்றி முழுமையாக விசாரணை நடத்தி இந்தத் தேரை செய்தவர் மற்றும் கோவில் நிர்வாகம் இதற்கு செய்த செலவு எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி அதில் பல லட்சம் ஊழல் செய்தவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று #இந்து_முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.