திருச்சி மாநகராட்சி 25ஆவது வார்டில் 371பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்கள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

0 215
Stalin trichy visit

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் சாலை உய்யக்கொண்டான் பாலம் அருகில் 25 ஆவது வார்டில் 371 பயனாளிகளுக்கு ரூபாய் 1.19 கோடி மதிப்பில் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று (14.6.22) வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு,  மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், ., சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன், திரு.செ‌.ஸ்டாலின் குமார், திரு.ந. தியாகராஜன், ப.அப்துல் சமது, முக்கியப் பிரமுகர் க.வைரமணி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.