மணப்பாறையில் சமூகநல்லிணக்க மனித சங்கிலி ஆலோசனை கூட்டம்

0 260
Stalin trichy visit

திருச்சி, அக்.6 சமூகநல்லிணக்க மனிதசங்கிலி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள ஆர்.வி.பி. மன்ற வளாகத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ம.தி.மு.க , வி.சி.க திராவிடர் கழகம் சார்பில் சமூகநல்லிணக்க மனித சங்கிலி போராட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி தலைமை வகித்தார் . சி.பி.அய். ஒன்றிய செயலாளர் தங்கராசு, நகர செயலாளர் ஜனசக்தி உசேன், சின்னதுரை, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் நகர் மன்ற உறுப்பினர் செல்வா ஜெகநாதன், சி.பி.எம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர் சீனிவாசன் ராஜேந்திரன் மாலிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆனந்தன், அன்பு, திராவிடர் கழக மணப்பாறை நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து கழக மாநில துணை பொது செயலாளர் சுப்ரமணியன், மாநில தலைமை முடிவு குறித்து பேசினார்.
மனிதசங்கில் பேராட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் இருந்து புதுத்தெரு கச்சேரி சாலை, திருச்சி சாலை, காந்தி சிலை, கோவில்பட்டி சாலை, காமராஜர் சிலை வரை அக்டோபர் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி 6 மணிவரை நடத்துவது மாவட்ட தலைவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யபட்டது.

Leave A Reply

Your email address will not be published.