மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், வளர்ப்பு, மீன்கள் வளர்ப்பு, காய்கறித் தோட்டம், அமைத்தல், காளான் பண்ணை அமைத்த, மண்புழு உரம் தயாரித்தல், தேனி வளர்ப்பு, மாட்டுத்தீவனச் செடிகள் பயிரிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு சிறந்த முறையில் பண்ணையத்தினை பராமரித்திட ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி தலைவர் ஜார்ஜ்பெர்னான்டஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.