கணவன் மனைவி சண்டையை விலக்க சென்ற பெண்ணுக்கு சரமாரி அடிஉதை
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே பெரிய பள்ளிபாளையத்தை சேர்ந்த சூர்யாவுக்கும்(22), அவருடைய மனைவிக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி(41) தகராறை விலக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா, சரஸ்வதியை சரமாரியாக அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயம் அடைந்த சரஸ்வதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் அவர் சூர்யா மீது காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.