திருச்சி கரூர் சாலையில் டூவீலர் மீது பஸ் மோதி கணவர் படுகாயம்; மனைவி பலி
குளித்தலை நச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி சபரி. இருவரும் இன்று காலை திருச்சி கரூர் சாலையில் எலமனூர் பகுதி அருகே டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த பஸ் மோதியது.

இதில் மனைவி சபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவளுடைய கணவர் சம்பத் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
