சீகல் சிறப்புப் பள்ளியில் சென்சரி கார்டன் திறப்பு விழா
சீதாலட்சுமி இராமசாமி கல்லுரி, தாவரவியல் மற்றும் விலங்கியல் துறை சார்பில் சீகல் சிறப்புப் பள்ளியில் நிறுவப்பட்ட சென்சரி கார்டன் மற்றும் அக்வாரியம் திறப்பு விழாவும் 75 வது சுதந்திர தின விழாவும் 12.8.2022 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திரு. சந்திர மோகன், திருச்சி மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் மற்றும்திரு இரமேஷ் இயன்முறை மருத்துவர், திருச்சி மாவட்டம் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். சீ கல் பள்ளி யின் சிறப்பு பற்றியும்,பள்ளியின் இயக்குநர் திருமதி ப்ரவீனா கார்மெல் அவர்களின் திறமை பற்றியும் பேசினர். கல்லுரியின் சார்பாக முனைவர் சு. கலா, முனைவர் மு ஹேமலதா, முனைவர் அ. சு. மகேசுவரி மற்றும் முனைவர் ம இசை ஆகியோர் பங்கேற்றனர். திருமதி ப்ரவீனா கார்மெல் அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார். 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி சிறப்பு பள்ளி குழந்தைகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை இவ்விழாவில் அரங்கேற்றினர். முனைவர் சு. கலா மற்றும் முனைவர் அ. சு. மகேசுவரி ஆகியோர் சீதாலட்சுமி இராமசாமி கல்லுரியினால் நிறுவப்பட்ட சென்சரி கார்டன் மற்றும் அக்வாரியம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதனால் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் பயன்களையும் குறித்து உரையாற்றினார்கள். விழாவின் இறுதியில் திருமதி பிரவீனா கார்மல் அவர்கள் நன்றியுரையில் கல்லுரியின் நிறுவனர், செயலாளர், இயக்குநர்கள் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.