“விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் மானியத்தில் இடுபொருட்கள்” அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் ரூ.15 லட்சம் மானியத்தில் நெல் நடவு இயந்திரம், பலர் டில்லர், பலர் வீடர் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்வின் போது

நகராட்சி நிர்வாக இயக்குனர் எஸ்.பொன்னையா, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எஸ்.இனிகோ இருதயராஜ், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உயர் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.