தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் உளுந்து வயல்கள் ஆய்வு

0 324
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் 2021 – 22 தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த உளுந்து செயல்விளக்க வயல்களை மத்திய திட்டத்தின் வேளாண்மை துணை இயக்குநர் சாந்தி ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, வேளாண்மை அலுவலர் ஐஸ்வரியா, மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மற்றும் தத்தமங்கலம் வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.