மின்கசிவால் வீட்டில் தீ விபத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

0 391
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு தளுதாளப்ப்பட்டியில் இன்று மின்கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. பொருட்கள் எரிந்து நாசம்.சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு தளுதாளப்பட்டி கருப்பண்ணாபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை.இவரது மனைவி கவிதா. இவரது வீட்டில் இன்று மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிபத்து குறித்து தளுதாளப்பட்டி ஊராட்சி செயலாளர் ரங்கராஜ் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.தகவலறிந்து சம்பவத்துக்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ஜீவா, போக்குவரத்து சுதர்ஷன், வீரர்கள் சதீஷ்குமார், திவாகரன், சௌந்தரராஜ், விக்னேஷ் உள்ளிட்டோர் விரைந்து சென்று சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அனைத்தனர். அப்போது கேஸ் சிலிண்டரில் தீ பரவ ஆரம்பித்தது துரிதமாக செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அனைத்தனர். மேலும் பக்கத்தில் வீடுகளில் தீ பரவாமல் இருக்க வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது

Leave A Reply

Your email address will not be published.