ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் பிரச்சார பயணம் : செய்தியாளர் சந்திப்பு
திருச்சி, ஆக.11 தமிழக ஆறுகம் வளமீட்பு இயக்க நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
தமிழக ஆறுகள் அனைத்தும் சார்ந்த குறுவடி நிலப் பகுதிகள் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் பிரச்சார பயணம் தொடக்கம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீரையும் தமிழக எல்லைக்குள் உருவாகும் ஆறுகளின் கிடைக்கும் நீரையும் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை ஏற்கனவே உள்ள சுமார் அரசின் கணக்கில் உள்ள 38,000 ஏரிகளும் முழுமையாக பராமரிக்கப்படவில்லை இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆற்றுப்படுகளையும் ஒருங்கிணைத்து 200 டிஎம்சி கொள்ளளவு உடைய புதிய நீர் தேக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் இந்த தலையாய தேவையை வலியுறுத்தி தமிழக ஆறுகள் வளமீப்பு இயக்கம் பிற நீர் மேலாண்மை அமைப்புகளுடன் சேர்ந்து தமிழகம் தழுவிய பிரச்சார பயணத்தை வரும் செப்டம்பர் 28 அன்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் டாக்டர் ராஜேந்தர் சிங் துவங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுக்க உள்ளோம் 17.10.2025 அன்று தமிழக அரசின் நீர்வளதுறை செயலாளரிடம் சந்தித்து இதனை வலியுறுத்தி திட்டத்தை கொடுக்க உள்ளோம்.
தமிழக நீர்வள மேம்பாட்டுத் திட்ட கோரிக்கை பயணத் திட்டம்.
தமிழகத்தில் 34 அறிவிக்கப்பட்ட ஆற்றுப்படுகைகள் உள்ளன. இவை யாவும் சுமார் 18,000 குறுவடி நில பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த 18 ஆயிரத்தில் ஏறத்தாழ 6000 குறுவடி நில பகுதிகள் மீட்டெடுக்க முடியாதவாறு சேதப் படுத்தப்பட்டுள்ளன எஞ்சியுள்ள 12,000 குறுவடிநில பகுதிகளும் சுமார் 12 600 கிராம ஊராட்சிகளின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளன. சுமார் 38,000 நீர்நிலைகளும் ஊராட்சிகளில் தான் உள்ளன. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சி ஒரு குறுவடி நில பகுதியை. சீரமைத்து அந்தந்த கிராமங்களில் உள்ள நீர் நிலைகளை மீட்டு எடுக்க முடியும். இவ்வாறாக தமிழக அரசின் கணக்குப்படி உள்ள 38 ஆயிரம் நீர் நிலைகளையும் முழு கொள்ளவுக்கு கொண்டு வர முடியும். மேலும் 200 டிஎம்சி கொள் அளவு கொண்ட புதிய நீர் நிலைகள் உருவாக்க வேண்டும்.அதற்கான ஆக்கபூர்வமான திட்ட அறிவிப்பும் செயல்பாடும் மேலும் 34 ஆற்றுப்படுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழகத்தின் முழு நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து பெய்து வரும் நல்ல மழையும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து சேரும் ஆற்று நீர் உள்ளிட்ட வெள்ளநீர் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை.
இத் திட்டங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லவும், அரசுக்கு கோரிக்கையாக வைக்கவும், தமிழக ஆறுகள் வளமீட்பு இயக்கம் மற்றும் பிற நீர் மேலாண்மை ஆர்வலர்களுடன் வேளாண் விவசாய சங்ககளுடனும் கலந்து ஒரு பிரச்சார பயணத்தை ஏற்பாடு செய்கிறது இப் பிரச்சார பயணத்தில் அனைவரும் ஒத்துழைக்கவும் தமிழகத்தில் நீர் வளத்தை பாதுகாக்கவும் சிரத்தையுடன் வேண்டுகிறோம் . இப்ப பிரச்சார பயணத்தை இந்தியாவின் தண்ணீர் மனிதர் டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் 28.09.2025 அன்று திருச்சியில் நடைபெறும் தமிழக நீர்வளப் பாதுகாப்பு திட்ட மாநாட்டில் துவங்கி வைப்பார்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரச்சார பயணத் திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் அவர்களிடமும் ஒப்படைக்கப்படும் தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் இத்திட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
28/9 ஞாயிறு தமிழக நீர்வளப் பாதுகாப்பு பிரச்சாரநத் திட்டம் துவக்க விழா, திருச்சியில். ஒவ்வொறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்.. 29.9.25திங்கள் திருச்சி நடைபெற இருக்கிறது இந்த நிகழ்வுகளில் தமிழகம் நீர் நிலை மேலாண்மைக்கு பாடுபடும் தன்னார்வலர்களும் வேளாண் விவசாய சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
வக்கீல் த குருசாமி, தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம், தலைவர், யோகநாதன் சிறுச்சோழன்,
தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா.கி.சதீஸ்குமார், புங்கனூர் – சின்னையன், வயலூர் ராஜேந்திரன், சேகர், ஜெகதீசன், சத்யன், சிவகங்கை திருச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்