சிறார் தீபாவளி; பி.எஸ்.ஆர் டிரஸ்ட் சார்பாக 10வது ஆண்டாக நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

0 695
Stalin trichy visit

திருச்சி பி.எஸ்.ஆர். ட்ரஸ்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறார் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் 275 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் பட்டாசு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிலையில் திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிறார் தீபவாளி -2021 நிகழ்வில், 275 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், தீபாவளி பட்டாசுகள் மற்றும் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் அமைச்சரின் தாத்தா, அப்பா மற்றும் அமைச்சரென மூவரும் இருக்கும் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லாஹ், பி.எஸ்.ஆர் டிரஸ்ட் நிதி அறங்காவலர் மற்றும் ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன், தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக்ஸ் செயலாளர் மற்றும் ஆசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்னா பாலாஜி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறை தலைவர் முத்துசாமி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.