உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உதவித் தொகையா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

0 414
Stalin trichy visit

திருச்சியில் தங்கி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் ஜெயக்குமாருக்கு வையம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் சேதுவின் தனது சொந்த ஊரான குமாரவாடியில் உள்ள தனது தோட்டத்தில் பிரியாணி விருந்து வழங்கினார். ஜெயக்குமாருடன், முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, முன்னாள் எம்பி குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னச்சாமி, சந்திரசேகர்‌ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திரளாகச் சென்று பிரியாணி விருந்தில் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கட்சி நிர்வாகிகள் பலரும் வரவேற்று பொன்னாடை போர்த்தினர். பின்னர் கட்சியினருடன் கலந்துரையாடிய ஜெயக்குமார், அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
பின்னர் செய்தியளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தேர்தல் அறிவிப்பில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி குறித்து நிதி அமைச்சர் உள்ளாட்சி தேர்தலின் போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தேர்தல் முடிந்து விட்டதே தற்போது பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டியதுதானே ஏன் அறிவிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்களை ஏமாற்றக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க அறிவிப்பு வெளியாகும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்தனர் ஆனால் அது நடக்கவில்லை. ஒவ்வொரு துறைக்கும் வழக்கமான நிதி ஒதுக்கீடுதான் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய திட்டம் என்ன?  உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளனர். ஆனால் அதில் பயனடைய என்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. அதற்கான அரசாணை வெளியிடும் போதுதான் தெரியவரும். மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுக்கிறீர்கள் மாணவர்கள் என்ன செய்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இருபாலருக்கும்தான் வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு மட்டும்தான் என அறிவிக்கப்பட்டதா? இதில் ஏன் பாகுபாடு காட்டுகிறீர்கள். மாணவர்கள் என்ன பாவம் செய்தனர். மக்களை ஏமாற்றும் திட்டமாகத்தான் இது உள்ளது. சென்னை மேயர் குறித்த கேள்விக்கு அவர் உண்மையை மறைத்து தேர்தலில் நின்று அதன் மூலம் மேயராகி இருந்தான் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரது பதவி பறிக்கப்படும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.