தாய், மனைவி இறந்த விரக்தியில் ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை?

0 322
Stalin trichy visit

தஞ்சாவூர் பழனியப்பா நகரைச் சேர்ந்த குசவலனின் மகன் 35 வயதான வினோத். எம்பிஏ பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் காருண்யா நகரைச் சேர்ந்த சிற்றரசுவின் மகளான 29 வயதான சூரியதர்ஷினி என்பவருக்கும். வினோத்திற்க்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து வினோத்

வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சூரியதரஷினுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாக சூரியதரஷினி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தை வினோத்தால் தாங்க முடியவில்லை. மேலும் அடுத்த சில நாட்களில் வினோத்தின் தாயாரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த நிலையில் இருந்த வினோத் சமயபுரம் ஆட்டு சந்தை பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத்தின் கையில் இன்பார்ம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அவருடைய மாமனாரின் செல்போன் எண்

 

குறிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் வினோத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வினோத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி 30 வயதான பாலமுருகன் சமயபுரம் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவி இறந்த துக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.