திருச்சியில் நாளை ரமலான் பெருநாள் கொண்டாட்டம்; தயாராகும் இஸ்லாமியர்கள்!
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ரமலான் மாதம் கடந்த மாதம் 3ம் தேதி பிறந்ததை தொடர்ந்து அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு வந்தனர். இந்தநிலையில், ரமலான் பெருநாள் (ஷவ்வால் மாத ஆரம்பம்) தொடர்பாகபிறை பார்க்கும் ஹிலால் கமிட்டி கூட்டம் திருச்சி பெரியகடை வீதியில் உள்ள பேகம் சாஹேபா பள்ளிவாசல் வளாகத்தில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. கூட்டத்துக்கு கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு காஜியுமான ஜலீல் சுல்தான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட மற்றும் மாநகர ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட மற்றும் மாநகர ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள்,
திருச்சி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் திருச்சி மாவட்ட அரசு காஜி நிருபர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஷவ்வால் மாத பிறை காணப்படவில்லை. ஆகையால் நாளை (செவ்வாய்க்கிழமை) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் (ரமலான் பெருநாள்) 3ம் தேதி கொண்டாடப்படும். எனவே இஸ்லாமியர்கள் இந்த ரமலான் பெருநாள் நோன்பை பெருநாள் தொழுகை நடத்தி, ஏழை மக்களுக்கு ஜகாத் செய்து, உலகம் அமைதி பெறவும் எல்ல மக்களும் நலமும், வளமும் பெற்று சுகமுடன் வாழவும் அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.