காய்ந்து போன அரசமரம் துளிர் விட்ட அதிசயம்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒக்கரை கிருஷ்ணாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவிலொன்று அமைந்துள்ளது இது அருகே நூறு ஆண்டு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது இந்த அரசமானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முற்றிலும் காய்ந்து போய்விட்டது மீண்டும் துளிர்க்காது என்று எண்ணி இருந்த நிலையில் அங்குள்ள விவசாயி பெருமாள் என்பவர் தனது முயற்சியால் தினமும் பெண்கள் உதவியுடன்108 குடம் நீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் ஆராதனைசெய்து வந்தார் .காப்பு கட்டுதல்.விளக்கு பூஜை போன்ற ஆன்மீக செயல்களை செய்து வந்தார் யாரும் எதிர்பார்க்காத காய்ந்து போன அரச மரம் துளிர்விட்டு பசுமையாக காட்சி தர தொடங்கியது இதைகண்ட ஊர் மக்கள் விவசாயி பெருமாளின் விடா முயற்சியை பாராட்டி வருகின்றனர்