ஊராட்சி செயலர் மீது தாக்குதல் : 2 பேர் கைது

0 466
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சியில் செயலராக (கிளர்க்) பணி புரிபவர் வேல்முருகன். இவர் நேற்று மாலை  பஞ்சாயத்து அலுவலகத்தில் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த கண்ணனூரை சார்ந்த மலையப்பன் மற்றும் மாமுண்டி ஆகியோர் பஞ்சாயத்து கிளர்க் வேல்முருகனை நோக்கி திடிரென தாக்க தொடங்கினார்

என்ன ஏது என்று அறியாமல் அலுவலகத்தை விட்டு வெளியோ ஓடிய வேல்முருகனை கற்கல் கொண்டு மாமுண்டி மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் மூவர் தாக்கி உள்ளனர்

பஞ்சாயத்து கிளர்க் வேல்முருகனின் அலறல் சத்தம் கேட்ட ஊர் பொதுமக்கள் மலையப்பன் மற்றும் மாமுன்டி ஆகிய இருவரையும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மற்ற மூவர் தப்பி ஓடி விட்டனர்

மேலும் காயம் அடைந்த வேல்முருகனை துறையூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிசைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மலையப்பன் ஆகிய இருவரை கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.