சாலை விபத்தில் ஐடி ஊழியர் பலி!
திருச்சி நாகமங்கலம் முடிகண்டம் காலனி தெருவை சேர்ந்தவர் நடராஜ் மகன் சக்திவேல்(வயது 39). பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருச்சி- மதுரை சாலையில் பஞ்சப்பூர் பகுதியில்
டூவீலரில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த சக்திவேல் பரிதாபமாக உயிரிழந் தார். விபத்து குறித்து மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.